-->

Saturday, January 19, 2013

சந்திர நபிகளாரின் சுந்தரத்தோற்றம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அதிக நெட்டையாகவும், அதிகக் குட்டையாகவும் இருக்கவில்லை. நடுத்தர உயரமானவர்களாக இருந்தார்கள். அன்னார் முற்றிலும் வெளுத்த நிறமுடையவர்களாகவோ பொது நிறமுடையவர்களாகவோ இல்லாமல் அவ்விரண்டிற்கும் மத்தியில் ஓர் அழகான நிறமுடையவர்களாக இருந்தார்கள். அன்னாரின் மேனி (கோதுமை போன்ற) பொன்னிறமானது. அன்னாரின் மேனி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
அவர்களுடைய சிரசின் ரோமங்கள் முற்றிலும் சுருண்டவையாகவும், முற்றிலும் நேரானவையாகவும் இல்லாமல் அவ்விரண்டிற்கும் பொதுவான ஒரு நிலையில் இருந்தன. தலைமுடி அடர்ந்து காதுச் சோணை வரை தொங்கிக் கொண்டிருந்தது. தாடி நெருங்கி அடர்ந்திருக்கும். அன்னார் மறையும் போது அவர்களின் சிரசிலும், தாடியிலும் இருபது நரைகள் கூட கிடையாது.
அன்னாரின் இரு புயங்களுக்கு மத்தியில் ஓர் இலஞ்சானை (முத்திரை) இருந்தது. அது தடித்து துருத்திக் கொண்டிருந்த ஒரு சதைக் கட்டியாக இருந்தது.
அன்னாருடைய இரு புஜங்களுக்கும் மத்தியிலுள்ள மார்பகம் விசாலமாக இருந்தது. அன்னாரின் இரு அகங்கைகளும், உள்ளங்கால்களும் சதைப் பிடிப்புள்ளவைகளாயிருந்தன. அன்னாரின் சிரசு சற்று பெரிதாக இருந்தது. மொழிகள் பருத்து எலும்புத் தாக்குள்ளவர்களாகவும், நெஞ்சுக் குழியிலிருந்து தொப்புள் வரை ஒரு சிறு உரோமக் கொடி ஓடியவர்களாகவும் இருந்தனர். வதனம் சதைப் பிடிப்பால் தொங்கிக் கொண்டிராமல் சமமாயிருக்கும். வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும்.
விழிகள் நன்றாக கருத்தவை. வெள்ளை விழிகளிலே செவ்வரி படர்ந்திருக்கும். இமைகள் நீண்டவை. அடர்ந்த மெல்லிய வளை புருவம். இரு புருவங்களும் ஒன்றோடு ஒன்று சேராது விலகியிருந்தன. இரு புருவங்களுக்கு மத்தியில் ஓரளவு தாரளமான அகலமிருக்கும். மேனியில் அதிகமான ரோமங்கள் இல்லை. மார்பு, வயிறுகளில் ரோமங்கள் கிடையாது. தோள் புயம், நெஞ்சின் மேற்பாகம் ஆகியவற்றில் ரோமங்கள் இருக்கும்.
கரண்டைக் கை நீண்டிருக்கும். கை, கால் ஆகியவைகளின் விரல்கள் பொருத்தமான நீளமுடையதாக இருக்கும். குதிக்கால் தசைப் பிடிப்பில்லாததாக இருக்கும். பாதக்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் ஒப்புரவாக இருக்கும். ஆதலால் அவைகளில் தண்ணீர் பட்டால் எங்கும் தங்குவதில்லை. கரங்களும் பாதங்களும் தசைப் பிடிப்பானவைகளாக இருந்தன. நடக்கும்போது முன்புறமாக சிறிது கவிழ்ந்து பாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி எடுப்பது போல் அழுத்தமாக அடியெடுத்து நிலத்தில் மெதுவாக வைத்து நடப்பர். பார்வை எப்பொழுதும் கீழ் நோக்கியே இருக்கும்.
வாய் விரிந்தும் ஒடுங்கியும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும். முன் பற்கள் சற்று இடை விட்டவைகளாக இருந்தன. அன்னார் பேசும் போது அந்தப் பற்களிலிருந்து ஓர் ஒளி வீசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்.
ஒருவரைத் திரும்பிப் பார்;ப்பார்களாயின் முகத்தை மட்டும் திருப்பாமல் – தேகம் முழுவதையுமே திருப்பி விடுவார்கள்.
ஆதாரம்: 'ஷமாயில் திர்மிதீ' நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
     நெஞ்சில் சந்தோசம் பெருகாதோ?
மண்ணில் தெய்வீகம் விளையாதோ..?
வாசக் கஸ்தூரி தவழாதோ..?
காணக் கண் தேடி தவிக்காதோ..?
அண்ணல் நபி அழகை,எண்ணி எண்ணிப் பார்த்தால்,,,,!
ஆனந்தமும்,பேரின்பமும் வளராதோ...?
அற்ப்புதங்கள்,சொல்லி சொல்லி முடியாதோ...!

வெண்மையும் செம்மையும் கலந்தோர் நிறம்..!
நிலவும் குடியிருக்கும் பூ முகம்..!
கன்னம் ரெண்டும் சாய்ந்து தோன்றிடும்..!
புருவம் அடர்ந்திருக்கும் பூரணம்..!
இமைகள் நீண்ட திருக்காரணம்..!
கருவிழி கொஞ்சும் அஞ்சனம்..!
திருவாய் விரிந்தே பொன் மலராகும்..!
பற்கள் இடைகொண்டு ஒளி வீசும்..!
தாடி அடர்ந்தே பேரெழில் கூட்டும்...!
தோளில் சரிந்தே நல் முடி யாடும்..!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில் )

அதிக உயரமில்லை மாநபி..!
அளவும் குறைவுமில்லை யா நபி..!
தோள்கள் விரிந்தவர் தீன் நபி...!
அதிக சதையுமில்லை நாயகம்...!
அதிக மெலிவுமில்லை மாதவம்..!
நெஞ்சம் விரிந்த ஓர் நூலகம்...!
அங்கங்கள் அளவான அழகாகும்..!
நெஞ்சோடு வயிறுந்தான் சமமாகும்..!
உள்ளங்கை பாதங்கள் சதையாகும்..!
குதிகால்கள் சதையின்றி மெலிவாகும்..!
திரு மேனி ஒரு காவியம்..! (நெஞ்சில்)

உயர இருந்து பள்ளம் நோக்கியே..!
சரிந்து நடக்கும்நடை போலவே..!
தோன்றும் நடை என்னும் வேகமே...!
புயங்கள் இரண்டின் நடுவாகவே..!
திகழும் நபியின் அடையாளமே..!
பொன்னோ மின்னோ ஒளி தேகமே..!
வேர்வையில் கஸ்தூரி மனம் வீசும்...!
வேறெங்கும் காணாத பிரகாசம்..!
பார்த்தாலே நெஞ்சங்கள் பறிபோகும்...!
பாதத்தில் என்றென்றும் சரனாகும்...!
திருமேனி ஒரு காவியம்...! (நெஞ்சில்)

(நன்றிகள் ,,இப்பாடலை இயற்றிய கலிபா மௌலவி ஹுசைன் முஹம்மது மன்பஈ அவர்களுக்கு!
தாலாட்ட வருவாளா என்ற பாடல் மெட்டில் பாடிப்பாருங்கள்! )
அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்ப்பேன்
அஸ்ஸலாமு அழைக்கும் முகமன் கூறி
ஆரத் தழுவ விரைவானா
ஸலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து

சப்தத்துடனே ஒலிப்பேனா

களிப்பின் கடலில் ஆளா மிளிர்ந்து
கண்ணீர் வழிய பார்ப்பேனா
கண்களில் வெளிச்சம் அதிகமாகி
காண முடியாமல் அழுவேனா

வாழ்த்தி கவிதை பாட நினைத்தும்
வார்த்தை வராமால் தவிப்பேனா
வார்த்தைகள் கோடி வளமாய்
வந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா

சிந்தனை இழந்து செயல் பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா
உணர்ச்சிகள் மீறி உயிர் நிலை மாறி
தரையில் விழுந்து சறிவேனா

ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹமமது
ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
யா ரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லம்
ہم جنس اگر ملے نہ کوئی آسمان پر
بہتر ہے خال ڈالیے ایسی اُڑان پر

آ کر گرا تھا ایک پرندہ لہو میں تر
تصویر اپنی چھوڑ گیا ہے چٹان پر

پوچھو سمندروں سے کبھی خاک کا پتہ
دیکھو ہوا کا نقش کبھی بادبان پر

یارو میں اس نظر کی بلندی کو کیا کروں
سایہ بھی اپنا دیکھتا ہوں آسمان پر

کتنے ہی زخم ہیٕ مرے اک زخم میں چھپے
کتنے ہی تیر آنے لگے اِک نشان پر

جل تھل ہوئی تمام زمیں آس پاس کی
پانی کی بوند بھی نہ گری سائبان پر

ملبوس خوشنما ہیں مگر جسم کھوکھلے
چھلکے سجے ہوں جیسے پھلوں کی دکان پر

سایہ نہیں تھا نیند کا آنکھوں میں دور تک
بکھرے تھے روشنی کے نگیں آسمان پر

حق بات آکے رک سی گئی تھی کبھی شکیب
چھالے پڑے ہوئے ہیں ابھی تک زبان پ
 
 
Download As PDF

நன்றி அபூர்வமாகிறது

   ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி "மகராசனாயிரு, மகராசியாயிரு" என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும். இன்று பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்து பாருங்கள். ஏதோ கொடுத்த காசைத் திரும்ப வாங்குவது போல் சலனமே இல்லாமல் அவர்கள் நகர்வதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்கலாம். காசு தருவதற்கு முன்பாவது சில உருக்கமான வசனங்கள் வரலாம். காசு தந்த பின் நன்றி தெரிவிக்கும் பார்வையோ, வார்த்தைகளோ பெற்றால் அது அதிசயமே.

பிச்சைக்காரர்கள் வட்டத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்போது நன்றி என்கிற உணர்வு மிக அபூர்வமாகி வருகிறது எனலாம். குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடத்தில் என எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் அது மனிதனிடம் காணச் சிரமமான அபூர்வமான உணர்வாகி வருகிறது. பல சமயங்களில் நன்றி தெரிவிக்கப்படுவது கூட சம்பிரதாயமாகவும், வாயளவிலும் இருக்கிறதே ஒழிய அது ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.

தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவாக எடுத்துக் கொள்ளச் சொன்ன திருவள்ளுவர் வாக்கு ஏதோ வேற்றுக் கிரக சமாச்சாரம் போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு செல்வந்தரிடம் பெரிய பெரிய உதவிகள் வாங்கி வந்தார். அதைப் பற்றிப் பேச்சு வந்த போது அலட்டாமல் சொன்னார். "வேணும்கிற அளவு இருக்கிறது. தருகிறார்".

"அதற்கும் மனம் வேண்டுமே சார். இருக்கிறவர்கள் எல்லாம் தருகிறார்களா?" என்றேன்.

"அதுவும் வாஸ்தவம் தான். என்னோட சொந்தத் தம்பி வேணும்கிற அளவு வச்சிருக்கிறான். ஆனா எனக்கு நயாபைசா உபகாரம் கிடையாது"

இருப்பவர்கள் எல்லாம் நமக்குத் தந்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர நம்மை விடக் கீழே இருப்பவர்களுக்கு நாம் என்ன உதவி எந்த அளவு செய்கிறோம் என்கிற சிந்தனை சுத்தமாகப் பலரிடமும் வற்றி வருகிறது.

மேலும், தருபவன் எப்போதும் தந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

"அவன் முன்னை மாதிரி இல்லை" என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்" என்ற குறளுக்கெல்லாம் இப்போது ஆதரவு சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் பெற்றோரிடம் "நீங்கள் பெரிதாக என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதை நாம் சர்வ சகஜமாகப் பார்க்கிறோம். கடவுள் எத்தனையோ கொடுத்திருந்தாலும் கொடுக்காத ஒன்றைக் காரணம் காட்டியே 'கடவுள் எங்கே இருக்கார்? இருந்தால் எனக்கு இப்படி செய்வாரா?' என்று புலம்புவதைக் கேட்கிறோம்.

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் பிறரிடம் பெற்ற உதவிகளை உடனுக்குடன் மறக்கும் மனிதனுக்கு, தான் அடுத்தவருக்குச் செய்யும் கடுகளவு உதவிகளும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பது தான்.

இது ஒரு பெரிய மனப்பற்றாக்குறையே. நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே உருவாகக் கூடியது. பெருகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது இல்லாமல் இருப்பது உள்ளம் இன்னும் உயரவில்லை அல்லது உள்ளம் மரத்து விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அந்த விதத்தில் நம் மன வளர்ச்சியை அளக்கும் அளவுகோல் தான் நன்றியுணர்வு.

மேலும் நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெறத் தகுதியில்லாதவனாகிறான். எனவே இயற்கையின் விதி அவனுக்குத் தானாகக் கொடுப்பதைக் குறைத்து விடுகிறது. (அப்படி குறைக்கா விட்டாலும் அவன் பெற்றதை யாருக்காக சேர்த்து வைக்கிறானோ அவர்கள் அவனிடம் நன்றி காட்டாதபடி பார்த்துக் கொள்கிறது.) எனவே பெறும் எதற்கும் மனதார நன்றி தெரிவியுங்கள். நன்றியுடனிருங்கள். பெறுவது பெருகும். நல்ல விதத்தில் பலனும் தரும்.

- என்.கணேசன்
Download As PDF

Wednesday, January 16, 2013

அண்ணலார்-ஒரு அழகிய உபகாரி


ரபீஉல் அவ்வல் மாதம்-மனித சமூகம் மறக்க முடியாத மாதம்.
இதுவரை உலக வரலாறு சந்தித்திராத ஒருமனிதரை சந்தித்தது.ஆம்  அவரின் பிறப்பின் ஓசையில் ரோம் பேரரசும்,பாரசீக வல்லரசும் சப்தமின்றி சரிந்து போனது.
விரல் வைத்து எண்ணிக்கொண்டிருந்த அந்த அரேபிய கூட்டத்தை மூக்கில் விரல் வைத்து உலகமே பேசியது அவரின் மகத்தான சாத  னையாகும்.
மிகப்பெரும் வரலாற்றுக்குச் சொந்தாக்காரரான அவர் –வாழ்கையின் அத்துனை துறைகளுக்கும் வழிகாட்டிச்சென்றார்.
கல்வி,பொருளாதாரம்,அரசியல்,இலக்கியம்,தத்துவம் என அவர் பேசாத எந்த துறையியும் இல்லை என்று கூறுமளவு நிறைவாக வாழ்ந்துவிட்டுச்சென்றார்.
ஹாதமின் கொடையை வரலாறு பார்த்திருக்கிறது,லபீதின் இலக்கியத்தை பார்த்திருக்கிறது,கைஸின் பொருமையை பார்த்திரு  க்கிறது,அந்தராவின் வீரத்தை பார்த்திருக்கிறது,இவை அனைத்தும் ஒருங்கே அமையைப்பெற்ற மாமனிதராக அண்ணல் எம்பெருமான் கண்மணி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமே பார்த்தது.
அவர் பிறக்கும் வரை அவரின் பெயரும் கூட அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டது.
அவர் விரும்பியபடி அவர் பிறந்தார்.அவரின் விருப்பத்தின் படியே மரணிக்கவும் செய்தார்.
அவரைப்பற்றி பேசிய அனைத்தும் தனித்துறையானது,தனிக்கலை  யானது.
நாயகம் ஸல் அவர்களின் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றி எத்தைனையோ நூட்கள் எழுதப்பட்டு விட்டன,அது அஸ்மாஉர் ரிஜால் எனும் தனிக்கலை அந்தஸ்து பெற்றது.இந்த துறையில் மட்டும் சுமார் ஐந்து இலட்சம் அறிவிப்பாளர்கள் உள்ளனர்.
குறைந்த சொல்லும் நிறைந்த பொருளும் கொண்ட அவரின் ஹதீஸ்களுக்கு விளக்கம் எழுதுவதில் பல்லாயிரக்கணக்கான முஹத்திஸீன்கள் தம்முடைய முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தும் கூட யாரும் முழுமையாக விளக்கத்தை எழுதி முடிக்கவில்லை.
அவ்வாறே,நாயகத்தின் சொல்லிலிருந்து பல சட்டங்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்த பல்லாயிரம் இமாம்கள் இதுவரை முடிவு காணவி  ல்லை.
70 ஹதீஸ்களையே மனனம் வைத்திருக்கும் இமாம் அபூஹனீபா ரஹ் ஆறு லட்சம் மார்க்கச்சட்டங்களை இந்த உம்மத்துக்கு தந்திருக்  கிறார்களென்றால் அண்ணலாரின் ஆளமான வரிகளின் விசாலத்த  ன்மையை புரிந்துகொள்ளமுடியும்.
அவரைப்பற்றிய அத்துனை கோனமும் அலசப்பட்டது,அவரின் அங்க அடையாளங்கள் பற்றிய துல்லியமான பதிவும் கூட அவரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு சான்றாகும்.
உலகில் எந்த தலைவரின் வாழ்வும் இவ்வளவு திறந்த புத்தகமாக பார்க்க முடியாது
அவருக்கும் அல்குர்ஆனுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் நெருக்கமா  னது.
ஆதனால் தான் அன்னாரைப்பற்றி அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது –அண்ணலாரின் குணம் குர்ஆன் என ஒற்றைவரியில் பதில் சொன்னார்கள்.அதாவது குர்ஆன் கூறும் அனைத்து தன்மைகளையும் உங்கள் நாயகம் ஒருங்கே பெற்று இருந்தார்கள்.
கடலை விட ஆளமான அவர்களின் வாழ்விலிருந்து பண்பாடுகள் எனும் பாட்த்தின் கீழ் ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த பண்புகள் குறித்து அல்லாஹ் பல்வேறு இடங்களில் புகழ்ந்து கூறுகிறான்.
உச்சகட்டமாக/நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின்மீது இருக்கிறீர் என்றான்.
நபித்துவத்தின் முதல் ஆதாரமாக தன் குணத்தையே முன் வைக்கிறார்கள்.ஆம்!
இதற்கு முன் 40 ஆண்டுகாலம் உங்களுடன் தானே வாழ்ந்தேன் என் நடத்தையில் ஏதேனும் குறை கண்டீர்களா?என கேட்டார்கள்.
அபூ ஜஹ்லும் கூட –முஹம்மதே!நீர் பொய்யர் என்று நான் சொல்ல மாட்டேன்,உம் கொள்கை எனக்கு ஒத்துவரவில்லை என்று தான் கூறினான்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்த அபூசுப்யான்=சிரியா சென்றபோது ரோமின் ஹிர்கல் மன்னர் சபையில் நாயகம் குறித்து
، ولما سأل هرقل أبا سفيان عن النبي عليه الصلاة والسلام -وقد كان حينها عدوه- أثنى عليه أبو سفيان بجميل الصفات، وعظيم الخلال، وقال معللا ذلك:(وأيم الله لَوْلَا مَخَافَةُ أَنْ يُؤْثَرَ عَلَيَّ الْكَذِبُ لَكَذَبْتُ) رواه الشيخان.
அவரின் நற்குணம் குறித்து புகழ்ந்து கூறினார்கள்,அதற்கு அவர் காரணமும் சொன்னார்-அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவரைப்பற்றி பொய் பேசினால் அது எனக்கு எதேனும் ஆபத்தை கொண்டுவந்துவிடும் என்ற பயம் இல்லாவிட்டால் தைரியமாக நான் பொய் சொல்லியிருப்பேன் என்கிறார்கள்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த நற்பண்புகளில் –இஹ்சான் எனும் ஒரு பண்பு உண்டு.
குர்ஆன் கூறுவது போல,
நபி ஸல் அவர்கள் தம் வாழ்நாளில் யாருக்கு கடமை பட்டாலும் அதற்கு பரிகாரம் செய்து விடுவார்கள்.
ஒரு சின்ன உதவி யார் செய்தாலும் அதற்கும் பதில் உதவி செய்து விடுவது அண்ணலாரின் மகத்தான குணமாகும்.
அல்லாஹ் தன் திருமறையில்-உபகாரத்திற்கு பதில் உபகாரமே கூலி என்று கூறுவது போல அண்ணாரின் வாழ்வு அமைந்தது.
நான் யாருக்கும் கடன்படவில்லை,கடமைப்பட்டவனில்லை என்று உலகில் யாரும் சொல்ல முடியாது.
மக்காவின் நெருக்கடியான கால கட்டத்தில் நபி ஸல் அவர்களுக்கு மிகவும் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருந்த மூன்று நபர்கள்-அபூதாலிப்-முத்இம் இப்னு அதி-அன்னை கதீஜா ரலி.
இவர்கள் செய்த உபகாரத்திற்கு நாயகம் எப்படி பதில் உபகாரம் செய்தார்கள்?
ومن وفائه عليه الصلاة والسلام لعمه أبي طالب أنه شفع فيه عند الله تعالى حتى خفف عنه العذاب؛ كما قال العباس رضي الله عنه: "يا رَسُولَ الله، هل نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ فإنه كان يَحُوطُكَ وَيَغْضَبُ لك؟ قال: نعم، هو في ضَحْضَاحٍ من نَارٍ لَوْلَا أنا لَكَانَ في الدَّرَكِ الْأَسْفَلِ من النَّارِ" متفق عليه، وفي رواية لمسلم قال صلى الله عليه وسلم: "وَجَدْتُهُ في غَمَرَاتٍ من النَّارِ فَأَخْرَجْتُهُ إلى ضَحْضَاحٍ".
அபூதாலிப் அவர்களுக்கு ஷபாஅத் மூலம் வேதனையை குறைத்தார்கள்
அல்லாஹ்வின் தூதரே!உங்களுங்கு பாதுகாப்பு வழங்கிய,உங்களுக்காக கோப்ப்படும் அபூதாலிப் அவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் உபகாரம் செய்தீர்கள்?என அப்பாஸ் ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்ட போது-ஆம் அவர் நரகத்தின் மேல் புறத்தில் வேதனைசெய்யப்படுகிறார்,நான் மட்டும் இல்லையென்றால் நரகத்தின் அடிபாகத்தில் இருப்பார் என பதில் கூறினார்கள்.
கதீஜா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு எவ்வளவு பெரும் உபகாரம் செய்தார்கள் என்பதை நாமறிவோம்,அன்னாருக்கு நபி ஸல் அவர்களின் பதில் உபகாரம் இப்படி அமைந்தது.
أما في حياتها فلم يتزوج عليها؛ وفاء لها، واعترافا بجميلها، وحفظا لحقها، قالت عَائِشَةَ رضي الله عنها: "لم يَتَزَوَّجْ النبي صلى الله عليه وسلم على خَدِيجَةَ حتى مَاتَتْ" رواه مسلم.
அவர்கள் உயிருடன் இருந்தவரை இன்னொரு திருமணம் நபி ஸல் அவர்கள் செய்யவில்லை.என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்
وأما بعد وفاتها رضي الله عنها فكان يذكرها، ويتعاهد بالهدايا صواحبها؛ حتى غارت عائشة رضي الله عنها منها
அவர்களின் மரணத்திற்கு பின்பு அவர்களை பற்றி அதிகமாக நினைவு கூறிக்கொண்டே இருப்பார்கள்,கதீஜா ரலி அவர்களின் தோழிகளுக்கு அன்பளிப்புக்களை அனுப்பி வைப்பார்கள்.
இன்னொரு அறிவிப்பில்,ஆடு அறுத்தால் முதலில் கதீஜாவின் தோழிகளுக்கு கொடுத்தனுப்புங்கள் என்று கூறுவார்கள் என்று வருகிறது.
كان المطعم بن عدي من سادة قريش ولما حُصرت بنو هاشم في الشعب كان يحنو عليهم ويصلهم في السر، وشارك في نقض صحيفة المقاطعة، ولما أوذي النبي صلى الله عليه وسلم في الطائف وعاد منها إلى مكة أجاره المطعم، وذبَّ عنه المشركين، فما نسي النبي صلى الله عليه وسلم له ذلك؛ إذ قال في أُسَارَى بَدْرٍ: (لو كان الْمُطْعِمُ بن عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي في هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ له) رواه البخاري.
முத்யிம் இப்னு அதிய் இவர் குறைஷி தலைவர்களில் ஒருவர்.நபி ஸல் அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவாசிகளால் வஞ்சிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு,ஒரு கனவாயில் தங்கினர்.
யாருடைய ஆதரவும் இல்லாத அந்த கால கட்ட்த்தில்-இந்த முத்யிம் இரகசியமாக நபியின் குடும்பத்திற்கு உதவி செய்தார்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சட்டத்தை உடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
மேலும் தாயிபில் நபி ஸல் அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டு கவலையுடன் மக்கா திரும்பிய சமயம்-மக்காவில் நுழைவதற்கும் தடை விதித்தனர்,இந்த நெருக்கடியான கால கட்டத்தில் முத்யிம் தன் பாதுகாப்பில் நபி ஸல் அவர்களை மக்காவுக்கு உள்ளே அழைத்து வந்தார்கள்.
இந்த உபகாரத்தை மறக்காத பெருமானார் ஸல் அவர்கள்-
பத்ரின் கைதிகளை பார்த்து இப்போது முத்யிம் உயிருடன் இருந்து,இந்த கைதிகள் விஷயத்தில் என்னிடம் பேசினால்-இவர்களிடம் எந்த ஈட்டுத்தொகையும் பெறாமல் விடுதலை செய்துவிடுவேன் என்றார்கள்
ஒரு சின்ன உதவியானாலும் அதை திருப்பிச்செய்வதில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார்கள்.
روى الطبراني في معجمه أن النبي -صلى الله عليه وسلم- رجع مرة من بعض أسفاره فنزل على أعربي في الصحراء فأكرم النبي -عليه الصلاة والسلام-، فقال له النبي -صلوات ربي وسلامي عليه-: "إذا جئت المدينة فأْتِنا".
فلم تمض أيام حتى أقبل ذلك الأعرابي إلى المدينة فنزل على رسول الله -صلى الله عليه وسلم-، فلما أراد أن ينصرف قال له النبي -صلى الله عليه وسلم-: "سَلْني"، يعني اطلب مني حاجة، فقال الرجل في هذا المقام الذي يسأله النبي -صلى الله عليه وسلم- أن يسأله حاجة، وكان حرياً به أن يسأله الجنة أو الشهادة في سبيل الله أو أن يكون مستجاب الدعوة، فإذا بذلك الرجل يقول: "أسألك دابة أركبها"، فوهب النبي -صلى الله عليه وسلم- دابة.
ثم قال له النبي -صلى الله عليه وسلم-: "سلني"، فقال الرجل: وأسألك كلباً يحرس غنمي، فأمر النبي -صلى الله عليه وسلم- أن يوهب إليه كلب يحرس غنمه؛ ثم قال له -صلى الله عليه وسلم-: "سلني"، فقال: وأسألك جارية تخدم أهلي، فوهب له جارية.
ثم سكت الرجل، فقال النبي -عليه الصلاة والسلام- للرجل لائما معنفا على قصور همته وعلى عدم علوها، قال له: "أعَجزتَ أن تكون كعجوز بني إسرائيل؟!"، فقال الصحابة -رضي الله عنهم- يارسول الله! وما عجوز بني إسرائيل؟.
فقال -عليه الصلاة والسلام-: إن موسى لما أراد أن يرتحل بقومه قال له قومه: إن يوسف -عليه السلام- (يعنون النبي الذي قبله) أمرنا ألا نجاوز المكان، وألا نرحل منه حتى نحمله معنا، قال لهم: فأين قبر يوسف -عليه السلام-؟ قالوا لا يعرفه منها أحد إلا عجوز منا. فجيء إليه بهذه العجوز، فإذا عجوز قد كبر سنها، ورق عظمها، وتقدم بها السن، حتى هي تترقب الموت وتودع الحياة، فقال لها موسى -عليه السلام-: أين قبر يوسف -عليه السلام-؟ قالت المرأة: والله لا أدلك عليه حتى تعطيني سؤلي! قال لها: وما سُؤلك؟ قالت: أن أرافقك في الجنة.
நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது ஒரு பாலைவனத்தில் வசித்த ஒரு கிராமவாசியின் இல்லத்தில் தங்கினார்க ள்,அந்த கிராமவாசி நாயகத்தை கண்னியப்படுத்தி உணவளித்தார்.அவரி  டமிருந்து விடைபெறும்போது நீங்கள் மதீனா வந்தால் நம்மிடம் வாருங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.
சிலநாட்கள் கழித்து அந்த கிராமவாசி மதீனா வந்தார்.அண்ணலாரை சந்தித்தபோது அவரை கண்ணியப்படுத்தி உணவளித்தார்கள்.
பின்பு எதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்,அவர் சுவனத்தை கேட்டிருக்கலாம்,அல்லது ஷஹாதத்தை கேட்டிருக்கலாம்,அல்லது மக்பூலான துஆவை கேட்டிருக்கலாம் ஆனால் அவரோ-எனக்கு வாகனம் வேண்டும் என்றார்.
அவருக்கு வாகனம் கொடுங்கள் என நாயகம் உத்தரவிட்டார்கள்,
மீண்டும் வேறு ஏதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்.
அவரோ-என் ஆடுகளை பாதுகாக்க நாய் வேண்டும் என்றார் அதையும் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.
அந்த கிராமவாசியோ-என் குடும்பத்திற்கு பணிவிடை செய்ய வேலைப்பெண் வேண்டும் என்றார்கள்,
அதை கொடுக்க உத்தரவிட்ட நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி,பனீஇஸ்ராயீலின் கிழவியை விட நீர் இயலாமல் ஆகிவிட்டீர் என்றார்கள்.
அது என்ன கிழவி? என ஸஹாபாக்கள் விளக்கம் கேட்டபோது,யூசுப் நபியின் கப்ர் தெரிந்த ஒரேபெண்ணான அவளிடம் அதை அறிவித்து தரும்படி நபி மூஸா அலை அவர்கள் கேட்க-அதை அறிவிக்கவேண்டு மானால் நான் கேட்பதை கொடுக்க வேந்தும் என்றாள்.
என்ன வேண்டும்?என்றபோது உங்களுடன் சுவனத்தில் இருக்க வேண்டும் என்றாள்,இறுதியில் அவளின் ஆசை நிறைவேரியது என்று நபி ஸல் அவர்கள் கூரினார்கள்.
روى البخاري في صحيحه : عن أنس :
أن غلاما يهوديا كان يضع للنبي صلى الله عليه وسلم وضوءه ويناوله نعليه فمرض فاتاه النبي صلى الله عليه وسلم فدخل عليه وأبوه قاعد عند رأسه فقال له النبي صلى الله عليه وسلم يا فلان قل لا إله الا الله فنظر إلى أبيه فسكت أبوه فأعاد عليه النبي صلى الله عليه وسلم فنظر إلى أبيه فقال أبوه : أطع أبا القاسم فقال الغلام أشهد ان لا إله الا الله وانك رسول الله فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أخرجه بي من النار.
நபி ஸல் அவர்களுக்கு ஒழுச்செய்ய தண்ணீர் வைத்தல்,அவர்களின் செருப்பை பராமரித்தல் போன்ற பணிகளை செய்து வந்த ஒரு யூத சிறுவர் நோய்வாய்பட்டபோது-அவரை நலம் விசாரிக்கச்சென்ற நபி ஸல் அவர்கள்,அச்சிறுவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்த்தர்கள்.அச்சி    றுவனோ தன் தலைமாட்டில் இருந்த தன் தந்தையை பார்த்தார்-நபி ஸல் அவர்கள் மீண்டும் கலிமா சொல்லிக்கொடுக்க அச்சிறுவனோ தன் தந்தையை மீண்டும் பார்த்தார்-
அப்போது அவனின் தந்தை –முஹம்மதுக்கு (ஸல்) கட்டுப்படு என்றார்.
உடனே அச்சிறுவன் கலிமாசொல்ல உயிரும் பிரிந்தது.
என் காரணத்தால் அச்சிறுவனை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று புகழ்ந்தார்கள்.
في تهذيب الكمال وفي تهذيب التهذيب لابن حجر في ترجمة أبي سفيان عن جعفر بن سليمان الضبعي عن ثابت البناني أنه قال: إنما قال النبي صلى الله عليه وسلم: "من دخل دار أبي سفيان فهو آمن"، لأنه أوذي في الجاهلية فدخل داره
மக்கா வெற்றியில் அபூ ஸுப்யான் வீட்டில் நுழந்தவர் பாதுகாப்பு பெற்றார் என நாயகம் சொன்னதற்கு காரணம்-ஆரம்ப நாட்களில் மக்காவில் தான் துன்புறுத்தப்பட்டபோது அவரின் வீடு அடைக்கலம் தந்ததின் நன்றிகடனாக தான் இவ்வாறு அறிவிப்புச்செய்த்தாக அல்லாமா ஸாபிதுல் பன்னானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
مَن صَنَعَ إِليكُم مَعرُوفًا فَكَافِئُوه ، فَإِن لَم تَجِدُوا مَا تُكَافِئُوا بِهِ فَادعُوا لَهُ حَتَّى تَرَوا أَنَّكُم قَد كَافَأتُمُوهُ ) رواه أبو داود (1672) وصححه الألباني .
உங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு பதில் உபகாரம் செய்யுங்கள்.
முடியாவிட்டால் அவருக்காக துஆ செய்யுங்கள்.
Download As PDF

சென்சார் படங்கள்

பொதுவாக Censor என்ற வார்த்தை Examine செய்வது, தேவையில்லாத விஷயங்களை மறைப்பது போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் எனக்கு (நமக்கு!) சென்சார் என்றாலே பலான காட்சிகளை தான் நினைவு  - படுத்துகிறது.  சென்சார் போர்டு என்ற அமைப்பே தேவையில்லை என்று சிலரும், சென்சார் போர்டு ஒழுங்காக தங்கள் கடமையை செய்வது இல்லை என்று பலரும் காலங்காலமாக குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஒரு படத்தில் அனுமதிக்கப்பட்ட காட்சி/ வசனம் மற்றொரு படத்தில் மறுக்கப்பட்டுள்ளது. கிளாமரின் அளவுகோலும் படத்துக்கு படம் மாறுகிறது. காரணம் பல இருந்தாலும் யார் படம், யார் ஆட்சி என்பதும் பல விஷயங்களை முடிவு செய்வதால் சென்சார் போர்டை ஒரு நல்ல அமைப்பாக கருத முடியாது என்று தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் பாடல் காட்சிகளில் பாடல் வரிகள் நிறைய சென்சார் போர்டால் மாற்றப்பட்டுள்ளது. கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இடம் பெறும். ஒரு முறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 

'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால
அத வைக்கிறப்ப சொக்கனும்  தன்னால"

என்று ஆரம்பிக்கும் பாடலில் 'அத வைக்கிறப்ப' என்ற சொல் தப்பான அர்த்தம் வருவதாக சொல்லி சென்சாரில் ஏற்றுக்கொள்ளவில்லை,சாதாரணமாக எழுதிய பாடலை பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது? என்றார். ஆரம்பத்தில் இருந்து சென்சார் மேல் கொஞ்சம் கடுப்பில் இருப்பவர் கமல். ( விளையாட முடியலே இல்ல!)   பின்னர் அந்த பாடல் 

" நான் பூவெடுத்து வைக்கனும  பின்னால   
அதில் வஞ்சி மனம் சொக்கனும் தன்னால"

என்று படத்தில் இடம் பெற்றது. (இரண்டாவது வரியில் மட்டும் Recording வித்தியாசமாக கேட்கும்). 'அந்த நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேன்', 'மலை,மலை. மருதமலை' போன்ற பல பாடல்கள் சென்சாரால் மாற்றம் செய்யப்பட்டவை. இது போல் நிறையவே இருக்கிறது. இப்போது வரும் பாடல்கள் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சென்சார் பிடியில் இருந்து எளிதில் தப்பித்து விடுகிறது.அதுவும் போக இப்பொழுதெல்லாம்  கட்சி, ஜாதி, மதம் போன்றவற்றை   பாதிக்கிற மாதிரியான விஷயங்கள் இருக்கிறதா என்று தான் அதிகமாக பார்க்கிறார்கள்.

படங்களுக்கு Censor certificate வழங்கும் Central Board of Film Certification தளத்தில் ஏதாவது படத்தின் பெயரை கொடுத்து தேடினால் அந்த படத்தில் கட் செய்யப்பட்ட வசனம் / காட்சி பற்றிய விஷயங்கள் கிடைக்கிறது.


நண்பன் படத்தில் தடை செய்யப்பட்ட காட்சிகள்  / Mute செய்யப்பட்ட வசனங்கள்.

1) அடீங்க
2) புடிங்கீட்ட
3) நாதாரி
4) இலங்கை
5) Personal  Properties
6) கொங்கைனா லேடிஸ் ............
7) மூன்று முறை வரும் 'கற்பழிக்கும் கர்ணன் விருமாண்டி' ஒரு முறையாக
    குறைக்கப்பட்டது.
8) 'Kingsum தீர்ந்தால்' -( Heartlay Battery பாடலில்)
9) இருக்கானா பாடலில் Cleavage மற்றும் Belly காட்சிகள்
என மொத்தம் 16 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசுத்துறையின் இலக்கணத்தை மீறாமல் மெதுவாக Update செய்வார்கள் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல்லான 'மேதை' படத்தைப்பற்றிய விபரங்கள் காணவில்லை.
Download As PDF