மாணவர்களிடம்
அறிவியல் மனோபாவத்தையும் ஆற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் ‘புதிய
தலைமுறை’, மாணவர்களுக்கு ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ என்ற போட்டியை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புதுவையிலும் நடத்தியது. அந்தப்
போட்டிகளில் மாவட்ட அளவில் வென்றவர்கள் இங்கே அணிவகுக்கிறார்கள்...
நவீன குப்பைத் தொட்டி
புதுவையில் தற்போதைய பெரும் பிரச்சினை குப்பைகள். இவற்றைக் கொட்டுவதற்கு முறையான இடம் இல்லாமல் அரசு திண்டாடுகிறது. குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு தோன்றியதாகக் கூறினர், புதுவை அர்சு சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யுவராஜன் மற்றும் கவிதன். மக்கும் குப்பைகளை (organic waste) பயன்படுத்தி ’organic gold எனும் இயற்கை உரமாக மாற்றியுள்ளனர்.
ஒரு பெட்டியில் (compost tumbler) ஆர்கானிக் வேஸ்ட்டுகளான மக்கும் குப்பைகளை (குச்சி, புல், சிறிது எரு, மண், வெட்டப்பட்ட காய்கறிகள், மரத்தூள்) தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கலந்து மூடி வைத்து விட்டால் 30 நாட்களில் இந்தக் குப்பைகள் அனைத்தும் மக்கி, இயற்கை உரமாக மாறிவிடும். மழைக் காலங்களில் 45 நாட்களில் உரமாக மாறிவிடும்.
“புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழில், ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையென குவிந்து வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேட்டையும் பற்றி விரிவான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் டைரக்டர் பிரேமலதா மேடம் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் பூமி ரக்ஷகனை கண்டுபிடிக்க எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்” என்கின்றனர், திருச்சி வி.ஓ.வி.சௌதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜி.ஆகாஷ் மற்றும் வி.கோகுல் பிரசாத்.
Download As PDF
நவீன குப்பைத் தொட்டி
எம். பிரியங்கா மதிஷரா, சென்னை
“சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மூடப்படாத குப்பைத் தொட்டிகள் குறைந்த கொள்ளளவே கொண்டிருப்பதனால், குப்பைகள் வெளியே சிதறி விழுகின்றன. துப்புரவுப் பணிகளின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் என்னால் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல இயலவில்லை. மேலும் சுற்றுச்சூழல்
மாசுபட்டு நோய்கள் உண்டாகின்றன. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், இந்த நவீன குப்பைத் தொட்டி உருவானது” என்கிறார், சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பிரியங்கா மதிஷரா. இதற்கு Super Stocker 3C என்று பெயர்.

- ஒரு பட்டனை அழுத்தினால் மூடி திறக்கிறது. உள்ளே குப்பையைக் கொட்டிவிட்டால் போதும். தானாகவே குப்பை நசுக்கப்பட்டு 3:1 வீதத்தில் அதன் அளவு குறைக்கப்படுகிறது.
- தொட்டி நிறையும் தருவாயில், துப்புரவு செய்யும்படி தானாகவே ஒரு எஸ்.எம்.எஸ். (SMS) நிர்வாகத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
- சூரிய ஆற்றலிலேயே இயங்குகிறது. ஆற்றலை தானாகவே சேமித்து வைப்பதனால் இரவிலும் பயன்படுத்தலாம்.
- மேலே, சற்றே உயரமாக ஒரு எல்.ஈ.டி. சேர்க்கை (LED Assembly) பொருத்தப்பட்டுள்ளதால், மிகுதியான ஆற்றலை சேமித்து வைத்து இரவில் தெரு விளக்காகவும் பயன்படுகிறது.
- மேலே விளக்கிற்கு அருகே, ஒரு CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தெருவைக் கண்காணிக்க உதவுகிறது.
- மொத்தச் செலவு : 8,000 ரூபாய்.
- க. ராஜேஷ்
புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்
ஆரிகானிக் கோல்டு

யுவராஜன் மற்றும் கவிதன், புதுவை
புதுவையில் தற்போதைய பெரும் பிரச்சினை குப்பைகள். இவற்றைக் கொட்டுவதற்கு முறையான இடம் இல்லாமல் அரசு திண்டாடுகிறது. குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு தோன்றியதாகக் கூறினர், புதுவை அர்சு சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யுவராஜன் மற்றும் கவிதன். மக்கும் குப்பைகளை (organic waste) பயன்படுத்தி ’organic gold எனும் இயற்கை உரமாக மாற்றியுள்ளனர்.
ஒரு பெட்டியில் (compost tumbler) ஆர்கானிக் வேஸ்ட்டுகளான மக்கும் குப்பைகளை (குச்சி, புல், சிறிது எரு, மண், வெட்டப்பட்ட காய்கறிகள், மரத்தூள்) தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கலந்து மூடி வைத்து விட்டால் 30 நாட்களில் இந்தக் குப்பைகள் அனைத்தும் மக்கி, இயற்கை உரமாக மாறிவிடும். மழைக் காலங்களில் 45 நாட்களில் உரமாக மாறிவிடும்.
- மக்கும் குப்பையின் இயற்கை உரம், செடி கொடிகள் மற்றும் விளைநிலங்கள் செழுமையாக வளர உதவும்.
- தனியாகக் குப்பையைப் பிரிப்பதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளிவரும் குப்பைகளின் அளவு குறையும்.
- பருவநிலை மாற்றத்திற்கான மாசடைந்த வாயு வெளியேற்றப்படுவது குறையும்.
- இந்த உரத்தை எரிவாயுவாக மாற்றலாம். மண் வளம் பெருகும்.
- எல்லுச்சாமி
புதிய தலைமுறை பயிற்சி பத்திரிக்கையாளர்
பூமி ரக்ஷகன்
ஜி. ஆகாஷ் மற்றும் வி. கோகுல் பிரசாத், திருச்சி
பூமி ரக்ஷகன்
ஜி. ஆகாஷ் மற்றும் வி. கோகுல் பிரசாத், திருச்சி
“புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழில், ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையென குவிந்து வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேட்டையும் பற்றி விரிவான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் டைரக்டர் பிரேமலதா மேடம் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் பூமி ரக்ஷகனை கண்டுபிடிக்க எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்” என்கின்றனர், திருச்சி வி.ஓ.வி.சௌதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜி.ஆகாஷ் மற்றும் வி.கோகுல் பிரசாத்.
- கழிவுப்பொருட்கள் இக்கருவியின் மேல்பகுதியில் கொட்டப்பட்டு முதல்நிலையில் மின்விசிறியின் உதவியுடன் எடை குறைந்த பொருட்கள் பிரிக்கப்படுகின்றன. இவை வெப்பக் கலனுக்குள் செலுத்தப்பட்டு எரிக்கப்படுகிறது.
- இதன்மூலம் பெறப்படும் சாம்பல் விவசாயத்திற்கும், வெப்ப ஆற்றல் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப் படுகிறது.
- முதல் இரண்டு நிலைகளில் விடுபட்ட குப்பைகள், மூன்றாம் நிலையில் அவற்றின் அளவிற்கேற்ப சல்லடை கொண்டு பிரிக்கப்பட்டு, பயோ கேஸ் உற்பத்தி மற்றும் வெர்மிகல்ச்சர் எனப்படும் மண்புழு வளர்ப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- பூமி ரக்ஷகனின் மொத்த அமைப்பும் சோலார் உதவியுடன் இயங்குகிறது.
- எம். ஆன்டோ அலோசியஸ்
புதிய தலைமுறை பயிற்சி பத்திரிக்கையாளர்
புதிய தலைமுறை பயிற்சி பத்திரிக்கையாளர்
No comments:
Post a Comment