ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "சொல்வதெல்லாம் உண்மை" பரவலாக பேசப்படுகிறது என்பதை நிகழ்ச்சியின் ஊடே வரும் அதிகப்படியான விளம்பரங்களை வைத்து (ஒரு மணி நேர நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இருபது நிமிட விளம்பரங்கள்)உணர முடிகிறது. சில தினங்களுக்கு முன் நான் பார்த்த "சொல்வதெல்லாம் உண்மையும்" அது குறித்த எனது பகிர்வும் இங்கே. கஷ்டத்தையும், எளிய மனிதர்களின் கண்ணீரையும் வியாபார நோக்கில் தொலைக்காட்சிகள் அணுகுகிறது என்பதே எம் கருத்து.
"நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயம்" என்பார்கள் நம் பெரியவர்கள். அந்த "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயத்தை" ஊரறிய பேசி - கடைசியில் கவுன்சிலிங் என்கிற பெயரில் நல்லவர்கள் போல வேஷமிட்டு நான்கு வார்த்தைகள் சொல்லி நிகழ்ச்சியை முடிக்கிறார்கள். உண்மையிலேயே இதில் சமூக சிந்தனை உள்ளதா என்று பார்ப்போம். பெரியவர்களின் வாழ்க்கை பிரச்சனையை அலசும் நிகழ்ச்சிக்கும் நான் பார்த்த நிகழ்ச்சியில் இருந்த சிக்கல்களுக்கும் நிறைய வேறுபாடிருந்தது.
இது நிச்சயம் "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயமே". விஷயத்திற்கு, விவாதத்திற்கு வருவோம். பதினான்கரை வயது நிரம்பிய சிறுமியும் (இந்த வருஷம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார்) இருபத்தி இரண்டு வயது நிரம்பிய இளைஞனும் காதலித்து ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த சிறுமியின் பெற்றோர் தேடுகிறார்கள். அந்த சிறுமியும், பையனும் - கையில் ஆளுக்கொரு விஷப்பாட்டிலை வைத்து கொண்டு "எங்களை காப்பாற்றுங்க" என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அலுவலக கதவை தட்டியதாக - நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.
அவர்களை அழைத்து தனியறையில் ஆலோசனை சொல்வதை விட, தொலைக்காட்சியில் உலகமறிய ஆலோசனை சொன்னால் தான் நன்மை பயக்கும் என்று எந்த மடையன் யோசனை சொன்னான் என்று தெரியவில்லை. நிகழ்ச்சியில் அந்த சிறுமியின் தாயார் சொன்னார். "நகரமா இருந்தாலும் இவள் ஓடி போனதும் யாருக்கும் தெரியாது. திரும்ப வந்ததும் யாருக்கும் தெரியாது. ஆனா அது கிராமம். இரண்டே தெரு. எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு" என்று அழுதவர் தொலைக்காட்சிக்கு ஏன் பேச வந்தார் என்று தெரியவில்லை.
நம் தவறுகளை நாமே வெளிச்சம் போடுவது - மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது போலில்லையா? பதினான்கு வயது பெண்ணின் காதலை(?) விவாதிக்கிறோம், புத்தி சொல்கிறோம் என்கிற பெயரில் வந்த யோசனையில் - எனக்கு விஷமத்தனமாக தோன்றிய நிர்மலா பெரியசாமியின் கருத்துகளை சொல்கிறேன். "உனக்கு பதினான்கு வயசு. நீ அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்பா, அம்மா கூட போ. அப்படி போகலன்னா ஹோம்க்கு அனுப்புவாங்க. பதினெட்டு வயசு வரை அங்க தான் இருக்கணும்" என்கிறார்.
அதற்கு அந்த சிறுமி "நான் ஹோமுக்கே போயிடுறேன்" என்கிறது. யோசித்து பாருங்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சிறுமிகள் எவரேனும் காதல் வயப்பட்டு, இத்தகைய சூழல் ஏற்பட்டால் "நமக்கு ஹோம் என்கிற வசதி உள்ளது. பெற்றோரின் பிடுங்கல் இல்லாமல் ஹோமில் தங்கி கொள்ளலாம்" என்கிற விபரீதமான யோசனையையும், நிர்மலா பெரியசாமியின் ஆலோசனை தராதா? அதிலும் "ஹோமுக்கு தான் போகணும், ஹோமுக்கு தான் போகணும்" என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார்.
நிகழ்ச்சியில் கண்ட மற்றுமொரு விஷமத்தனமான விஷயம். சிறுமி, அந்த பையன், சிறுமியின் அம்மா என்று அனைவரும் பையில், மடியில் விஷ பாட்டில் வைத்திருப்பதாக சொல்லி ஒருவரையொருவர் மிரட்டும் காட்சி - தற்கொலை எனும் ஆயுதத்தை பயன்படுத்தி, அனைவரையும் மிரட்டலாம் என்கிற சிந்தனையை சிறார்களுக்கு தராதா? அந்த பதினான்கு வயது சிறுமி சொல்கிறது. "அவரில்லாமல் என்னால் வாழ முடியாது" என்று. பள்ளி மாணவர்கள் காதலித்தால் தப்பில்லை என்று சொல்லி விஷமத்தை கக்கும் சினிமாக்களை விட விஷமத்தன்மை கொண்டவை
இத்தகைய நிகழ்ச்சிகள். விவாதிக்கவும், மனிதர்களுக்கான பிரச்சனை பற்றி பேசவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க - முன்பே சொன்னதை போல "நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய ஒரு சின்னஞ்சிறுமியின் விஷயத்தை" ஊரறிய காட்சிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறுமி என்று நாம் சொல்வதற்கான காரணம் - அந்த சிறுமி அவ்வளவு சின்னவளாக இருந்தாள். பத்தாம் வகுப்பு மாணவி என்று சொன்னால் நம்பக்கூட இயலாது. அந்த சிறுமியின் துப்பட்டாவை கொண்டு இறுக்குகிறார் தந்தை.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்கு என்ன காரணமிருக்கக்கூடும். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லக்கூடும். "இதுவொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவிகளுக்கு தேவையான நிகழ்ச்சி" என்று. ஆனால் நாம் அப்படி நினைக்கவில்லை. ஒரு பக்கம் பள்ளி மாணவ மாணவிகள் காதலிக்கும் சீரியல்கள் மற்றும் சினிமாக்களை ஒளிபரப்ப வேண்டியது. மறுபக்கம் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியாம். நீங்களே நோய் பரப்பும் கிருமிகளை பரப்பி விட்டு - பிறகு அதற்கான மருந்து மாத்திரைகளை நீங்களே தருவீர்களாக்கும்.
பத்து வருஷங்களுக்கு முன் இல்லையே சிறுமிகளின் காதலும், ஓடி போதலும். இன்றைக்கு ஏன். காட்சி ஊடகங்கள் தானே முதல் காரணம். பொறுப்புணர்வில்லாம்ல் நிகழ்ச்சி தயாரித்து சமூகத்தை குட்டி சுவராக்கி விட்டு, குட்டி சுவரான சமூகத்தை நேராக்கவும் நிகழ்ச்சி தயாரிக்கிறீர்கள். முட்டாள் மனிதர்கள் உங்களையும் நம்புகிறார்கள்.

No comments:
Post a Comment