-->

Wednesday, November 21, 2012

எத்தனை பேருக்கு தூக்கு

1983ம் ஆண்டு முதல், மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனை விதிக்கிறது. பயங்கரவாத செயல்கள், குற்றங்களில் இருந்து தப்பிக்க கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது, தற்கொலைக்கு உடந்தையாக இருப்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, நாட்டிற்கு எதிராகச் செயல்படுவது, போதை பொருள் கடத்தல் போன்றவற்றிற்காகவும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.சுதந்திரத்திற்குப் பின், இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. சுதந்திரத்திற்கு பின், நாட்டில் இதுவரை 52 பேர் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1975க்கும், 1991க்கும் இடையே 40 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2007ல் 100 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2001ல் 33 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்
* 2012 நவ., 21ல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
* 2005 ஏப்., 27ல் கடத்தல், கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்டதற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான்.
* 2004 ஆக., 14ல் பாலியல் குற்றத்திற்காக தனஞ்செய் சட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான்.
கசாப்பிற்கு அமைந்தபுதன் கிழமை

Download As PDF

No comments:

Post a Comment