கம்யூனிஸ்ட் கட்சிகளில் எதைப்பற்றி
பேசினாலும் பொலிட் பீரோவில் பேசி முடிவெடுத்துதான் கொள்கை அடிப்படையில்
பேசுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பாரம்பரியம் வாய்ந்த இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் பேசுவது வியப்பளிக்கிறது.
28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட உள்ள 'ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை' தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கையெழுத்திட்டார் என்று ஒரு செய்தி மூன்றாம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
மதுஒழிப்பு நல்லகண்ணு - தினமணி 3ஆம் பக்கம்
அதே 28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: "தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு செய்தியும் ஏழாம் பக்கத்தில்வெளிவந்துள்ளது.
மதுதிணிப்பு தா.பாண்டியன்-தினமணி 7ஆம் பக்கம்
"தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை
மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று
மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத்
தேவையில்லை. தமிழகத்தைப் போன்றே மதுபானக் கடைகளைத் திறக்க ஆந்திர அரசு
முடிவு செய்துள்ளது" என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மது வேண்டாம்-கம்யூனிஸ்ட் நாடாக சோவியத் ரஷ்யா இருந்தபோது அங்கு கம்யூனிஸ்டு அரசு மேற்கொண்ட மது எதிர்ப்பு பிரச்சாரம்
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 02-06- 2012 அன்று காந்தீய மக்கள் இயக்கம் நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் கலந்து கொண்டு மதுவை ஒழிக்க சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.
மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் -மதுவை ஒழிக்க சிறப்புரை
ஏன் இந்த முரண்பாடு. "தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக அவர் காத்திருப்பதாக" தகவல்கள் வருகிறதாம் என்று விளக்கம் தருகிறது "ஓயாத அலைகள்" எனும் வலைப்பக்கம்.
பாட்டாளி மக்கள் கட்சி - மது ஒழிப்புக் கொள்கை
எது எப்படியோ - பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பை தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
முழுமையான மதுவிலக்கு பாமகவின் லட்சியம் என்றாலும் - அரசாங்கம் அதற்கு உடனடியாக முன்வராத நிலையில் 'படிப்படியாக மதுவை ஒழிப்பதற்கான தெளிவான திட்டத்தையும் அளித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி - அதனை இங்கே காண்க:






No comments:
Post a Comment