நாம் எத்தனையோ பிரச்சனைகளை அன்றாடம்
செய்தித்தாள்களில் படித்து வருகின்றோம். போலி ஆவணம், போலியான தங்கம்,
போலியான மருந்துகள், போலி மருத்துவர்கள், போலி சாமியார்கள், இப்படி பல
விசயங்களில் போலிகளை சந்திக்கும் நாம் அடுத்து சந்தித்து கொண்டிருப்பது
போலி எரிவாயு உருளைகள்..இந்தியாவின் வியாபார முத்திரையான ஐ எஸ் ஐ யோடு
இண்டேன் , ஹெச்பி போன்ற உருளைகளோடு கலந்து வருகின்றது.
எத்தனையோ ஊழல்கள்...அதில் இதுவும் ஒன்று,
எதில்தான் போலி இல்லை என்று நினைகிண்றீர்களா? மற்ற பொருட்கள் எப்படி என்று
தெரியாது...ஆனால் இது ஆளையே அடையாளம் தெரியாமல் அழிக்கும் ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு என்பதை மறக்காதீர்கள். மக்களின் உயிரோடு விளையாட துணிந்து
செயல்படுத்தி இருக்கின்றது ஒரு நிறுவனம்.
இது சீனா தயாரிப்பு அல்ல, இந்தியாவின்
சட்டிஸ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த
அக்கிரமம் நடந்தேறி இருக்கின்றது. இது ஏன் ஊடகங்களில் பிரபலமாகவில்லை
என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இது எவ்வளவு முக்கியமான செய்தி?
ஏன் இது வெளியிடப் படவில்லை? ஒரு அரசாங்கம் தயாரிக்கும் ஒரு பொருளை அவர்கள்
பெயரிட்டு சாதாரண மனிதன் எப்படி துவங்க முடியும்..அந்த ஆலைக்கு அனுமதி
கொடுத்தது யார்? வேறு யாரெல்லாம் இதில் தலையிட்டிருக்கின்றார்கள்?
எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும்?
போலி எரிவாயு உருளைகளை எப்படி அடைத்து வைத்து வெளியிடுகின்றார்கள்? அவர்கள்
வேறு பெயர் வைத்து வெளியிட்டால் அது தனியார் மயமாகி விடும், ஆனால் அரசாங்க
விளம்பரத்தில் தனது எரிவாயு உருளைகளை பயன்படுத்துவது என்பது
அசா....தா....ர...ண...மான ஒன்று.
கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள்..இது பாஸ்கர்.காம் என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவலாகும்.
ஆதாரம் : www.bhaskar.com நன்றி...
கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள்..இது பாஸ்கர்.காம் என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவலாகும்.
ஆதாரம் : www.bhaskar.com நன்றி...
No comments:
Post a Comment