மனைவியை திருப்திபடுத்துவது எப்படி? ( புது மாப்பிள்ளை மட்டுமல்ல பழைய மாப்பிள்ளைகளும் படிக்கலாம் )
Download As PDF
1. கல்யாணம் ஆனதும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் அதுவும் மாமியார் வீட்டுக்கு அருகில் வீடு பார்த்து செல்ல வேண்டும்.
2. உன் சகோதர சகோதரிக்கு படிக்க செலவு செய்தால் அது அனாவசிய செலவு அதற்கு பதிலாக மைச்சினி படிப்பு அல்லது திருமணத்திற்கு செலவு செய்தால் அது மனைவியை புரிந்த கொண்ட நல்ல கணவன் செய்யும் செயல்.
3. மனைவி எழும் முன் எழுந்தும் மனைவிபடுக்க செல்லும் போது கூடவே படுக்க செல்ல வேண்டும்.
4. அம்மா அப்பா நண்பர்களுக்கு மனைவி போன் செய்து மணிக்கணிக்கில் பேசும் போது தொந்தரவு செய்யாமல் முடிந்தால் பாத்திரம் கழுவி வைக்க வேண்டும்.
5. உங்கள் அம்மா அப்பா நண்பர்களிடம் நீங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் பேசி நேரம் வீணாக்க கூடாது.
6. வீக்கெண்டுகளில் நண்பர்களை கூப்பிட்டு வீட்டில் சமைக்க சொல்ல கூடாது, அதற்கு பதிலாக மனைவியையும் அவர்கள் பெற்றோர்களை ஹோட்டலுக்கு கூப்பிட்டு செல்ல வேண்டும்.
7. பண்டிகை தினங்களில் மனைவியின் பெற்றோர் மட்டும் ,சகோதர சகோதரிகளுக்கு நல்ல துணிமணிகளை வாங்கி கொடுத்து விருந்து கொடுக்க வேண்டும்
8. குழந்தை பிறந்த பிறகு மாமனார் மாமியாரை வீட்டோடு கூப்பிட்டு வைத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்து கொள்ளத்தான் அவர்களை கூப்பிட வேண்டும் ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் அவர்களை குழந்தைகளை பார்த்துக்க சொல்லி தொந்தரவு பண்ணக் கூடாது.
9. மிகவும் முக்கியமாக மனைவி இருக்கும் போது ஆன்லைன் பக்கம் தப்பி தவறி வந்திடக்கூடாது.
10. தப்பி தவறி எங்க அம்மா நல்லா சமைப்பாங்க என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது.
11. தப்பி தவறி மனைவி, சமையலை சொதப்பி இருந்தால் சமையல் நல்லா இல்லை என்றும் மட்டும் சொல்லிவிடக் கூடாது
12. இறுதியாக பக்கத்து வீட்டுகாரனை விட அதிக அளவு சம்பாதிக்கணும் பக்கது வீட்டில் இருப்பதைவிட எல்லாம் விலையுர்ந்தவைகள் நம் வீட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியும். அப்புறம் என்ன உங்க வாழ்க்கையில் எப்போதும் வசந்தம்தான் வீசும்....
இதை எல்லாம் கடைபிடிக்கவில்லையென்றால் புயல்தான் அடிக்கும்..
No comments:
Post a Comment