-->

Sunday, December 23, 2012

போரில் செத்தவர்களை விட

அமரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேரடியாகவும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது ஆக்கிரமிப்பு படைகளை நிறுத்தியுள்ளது.
 அங்கெல்லாம் மக்கள் தமது விடுதலைக்காக உலகின் பலம் மிக்க அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர்.
suran
 . இப்போது 2012 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவத்தின் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அச்சத்தை தரும் அளவு உள்ளது. 
2012 இல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட அமரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை 303 ஆகும் எனக் கணிப்பிடுகிறார்கள். 
suran
ஏகபோக வியாபார நிறுவனங்களுக்காகவும் அவற்றின் சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்காகவும் நடத்தப்படும் அமரிக்கப் போரின் கோரம் தற்கொலைக்கான அடிப்படைக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது. 
2012 இல் தற்கொலை செய்துகொண்ட இராணுவத்தின் தொகை போரில் இறந்தவர்களின் தொகையிலும் அதிகம்.
அமெரிக்க போர் வீரர்கள் சொந்த நாட்டை விட்டு வேண்டா விருந்தாளிகளாக அடுத்த நாட்டில் மக்கள் வெறுப்புக்கிடையில் பணியாற்றுவதும் ,குடும்பத்தை விட்டு ஆண்டு கணக்கில் இருப்பதும்  படை வீரர்களுக்கு மிக மன அழுத்தத்தை தருகிறதாம். அதன் விளைவுதான் இந்த தற்கொலைகள்.
Download As PDF

No comments:

Post a Comment