பகுத்தறிவு
ஏடு விடுதலையில் ஒரு அற்புதமான கட்டுரை வந்துள்ளது. பெரியாரின்
மறைவுக்கு தலையங்கம் தீட்டாத "இந்துவின் பார்ப்பனத்தனம்
" என்கிற தலைப்பில் வந்த கட்டுரை. அதை வாசிப்போம்.
"உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு
ஹிந்து பார்ப்பன ஏடுதானே! தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான
சி.பி.ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட
ஹிந்து ஏடு,அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே! அன்னை மணியம்மையார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (Obituary) வெளியிட்டு இருந்தது என்றால், இவற்றை விட பார்ப்னத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?"
ரெம்பவும் கொடுமையாக தான் இருந்திருக்கிறது இந்துவின் செயல்பாடு. இது மட்டும் தானா? ஈழ விவகாரத்தில் தமிழ் மக்களுக்கெதிராக செய்தி வெளியிட்ட கொடூரங்களை என்னவென்று சொல்வது. ஆனால் அதே நேரம் இந்துவின் இத்தகைய விஷமச் செயல்கள் குறித்து வியப்படைய என்ன இருக்கிறது. அவாள்கள் "இவாள்கள் மரணம் குறித்து முதல் பக்கமும், தலையங்கத்திலும் எழுத வேண்டும்" என்று நினைப்பது எவ்வளவு பெரிய பேதமை. எப்படி எழுதுவார்கள்.
காலமெல்லாம் அவர்களை திட்டிய ஒரு தலைவரை இரட்டிப்பு செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. ஊடகங்கள் செய்தியை வெளியிடும்போது - அதில் உண்மையும், நேர்மையும் இருக்கிறதா என்பதனை மட்டும் பார்த்து வெளியிட வேண்டும். ஆனால் தமிழ் ஊடக உலகில் அவை சிறிதளவும் இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. தமிழ் ஊடக உலகம் - ஆரியம், திராவிடம் என்று பிரிந்துள்ளது. இரண்டு சார்பு ஊடகங்களும், அந்த லட்சணத்தை கொண்டு தான் இயங்குகிறது என்பதை மறைப்பதற்கில்லை. அதனால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொள்ள தகுதி படைத்தவர்கள் இல்லை.

துவேஷம் என்ற ஆலகால நஞ்சுடன் ஆரிய ஊடகம் மட்டுமா உள்ளது என்பதை பகுத்தறிவது அவசியமாகிறது. துவேஷம் என்பது சாதிய பற்றாளனுக்கு இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். அதனால் பார்ப்பனியத்துக்கும் உள்ளது, எல்லா சாதிக்காரர்களுக்கும் உள்ளது. ஆனால் சுய மரியாதைக்கார பகுத்தறிவு புள்ளிகளுக்கும் செய்திகளை வெளியிடும்போது - அதே துவேஷம் என்ற ஆலகால நஞ்சுடன் "சாதிக்கொரு நீதி" உரைக்கும் கொடுமையை செய்வது தான் ஆச்சரியமாய் உள்ளது.
அதனால் பாதிக்கப்படுவது சாமானியன் என்பதை உணராமல் இருப்பது வியப்பாக உள்ளது. பார்ப்பனிய ஊடகங்கள் மறைக்கிற செய்தியை பகுத்தறிவு ஊடகங்கள் தருகிறது. பகுத்தறிவு ஏடுகள், மறைத்த சாதீய செய்திகளை பார்ப்போமா? அவர்கள் மட்டும் சாமானியர்களா? சென்ற வாரம் தென் தமிழகம் சாதீய மோதல்களால் அல்லாடிக் கொண்டிருந்திருக்கிறது. ஊடகங்கள் அது குறித்த செய்திகளை, விவாதங்களை நடத்தி கொண்டிருக்கின்றன. வை.கோ அமைதி வேண்டி இறைஞ்சினார்.
ஆனால் - சம்பந்தப்பட்ட தினங்களில் -சாதிய வெறி, சாதிய மோதல் குறித்த ஒரு செய்தியும் தம் ஏட்டில் வராமல் பார்த்து கொண்டது விடுதலை. தப்பித்தவறி தூக்கத்தில் கூட, பேசாவண்ணம் பார்த்து கொண்டார்கள். என்னே பகுத்தறிவு. "சாதியை ஒழித்த சம்ர்ப்புலிகள்" என்று பெருமை பேசி கொள்பவர்கள் - துளிர்ந்து கொண்டிருக்கும் சாதி வெறியை கண்டித்திருக்க வேண்டாமா? "பெயரில் மட்டும் சாதியை பெயரளவுக்கு ஒழித்து விட்டு, சாதியை ஒழித்ததாய் வீண் ஜம்பம் அடிப்பவர்கள்"
சாதி கலவரம் தரும் அமைதியின்மை, மரணங்கள், நிச்சயம் அற்ற வாழ்க்கை... இவற்றுக்கு என்ன பதில் சொல்வார்கள். தங்கள் பகுத்தறிவு ஏட்டில் ஒரு செய்தி வரவில்லை என்பதற்காக - அத்தகைய சாதிய வன்செயல்கள் நடக்கவே இல்லை என்று சாதிக்க போகிறார்களா? பார்ப்பனிய ஊடகங்கள் தமிழ் தலைவர்களின் மரணத்தை பற்றி பெரிதாய் எழுதவில்லை என்றால் அதனால் பெரிதாய் என்ன பாதிப்பு ஏற்பட போகிறது. ஆனால் பகுத்தறிவு ஊடகமும், சாதியை ஒழிக்க வரிந்து கட்டி கொண்டிருப்பதாய் பகுத்தறிவாளர்களும் - இத்தகைய சாதி மோதலை கண்டு கொள்ளாமல் விடுவதும், அது குறித்து எழுதாமல் விடுவதும் - சமூகத்துக்கு செய்யும் மிக பெரிய பாதிப்பு.
"இனி சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்" என்று சொல்வதற்கு வெட்கப்படுங்கள். அப்படி சொல்வதற்கு முன் ஆயிரம் முறை யோசியுங்கள். வருஷா வருஷம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது மட்டுமல்ல - பெரியாரை நினைவுக்கூரல். சாதியற்ற சமுதாயத்தை உண்மையிலேயே அமைக்க முயல்வது தான் சிறந்த அஞ்சலி. ஆனால் நம் பகுத்தறிவு புள்ளிகள் - சாதிய மோதல் குறித்த செய்தியை போடவே அஞ்சுகிறார்கள். இவர்களாவது, ஏனைய ஆதிக்க சாதிகளை ஒழிக்க போவதாவது.
"காந்தி ஜெயந்திக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும்..." கருத்து தெரிவிக்கிற தைரியம் - அமைதியை கெடுக்கும் சாதிய தலைவர்களின் ஜெயந்தி விழாக்களை பற்றி பேச இருப்பதில்லை. போய் - சமூக தளங்கள் எவ்வளவு கேவலமாக சாதீய வன்மத்தை வளர்க்கின்றன என்பதை வாசியுங்கள். "சாதிய மோதல் -எத்தனை அனர்த்தங்களை உண்டு பண்ணினாலும், இப்போதைக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு வரமாட்டோம்" என்று அடம் பிடிக்கும் பகுத்தறிவுகளை என்னவென்று சொல்வது. திருவரங்கமும் முக்கியம், பிற சாதீயின் வெறியை அரங்கேற்றுவதும் முக்கியம். ஒரு உண்மையை பார்ப்பன ஊடகம் மறைக்கிறது என்பதற்காக - அவை மக்களிடத்தில் சேராமல் இருக்க போவதில்லை.
அதே போல பகுத்தறிவு ஏடுகள், தம் சார்பு ஆட்களின் படுபாதக செயல்களை (நில அபகரிப்பு, தினகரன் அலுவலக எரிப்பு) மறைப்பதனால் மட்டும் - அவை நடக்காமல் இருந்ததாக ஆகிவிடாது. "நீங்கள் காட்டுகிற ஆதிக்க சாதியின் வெறியும் மக்களுக்கு தெரியும். நீங்கள் காட்டாத ஆதிக்க சாதியின் வெறியும் சாமானியர்களுக்கு புரியும்". அதனால் "சாதியை ஒழித்த சமர்ப்புலிகள்" என்று சொல்லி உங்களையும், மக்களையும் ஏமாற்றாதீர்கள். உங்களை ஏமாற்றி கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கலாம். மக்களை ஏமாற்ற உங்களுக்கு ஏது உரிமை.

நெஞ்சம் முழுக்க நேர்மையுடன் சாதீய வெறியை சாட பழகி கொள்ளுங்கள். அப்படி செய்தால் தான் பகுத்தறிவுக்கே பெருமை.
No comments:
Post a Comment