அன்பு - பாசம் - காதல்
ஞானமற்ற மறதியாளனே, உன்னை நேசிப்பவனையே நீ நேசி, உன்னை தேடுபவனையே தேடு. தன்னை நேசிப்பவனையே அல்லாஹ்வும் நேசிக்கிறான். “அடியானே, உன்னைச் சந்திக்க அதிக ஆவல்படுகிறேன். என்று அல்லாஹு தஆலா கூறியிருப்பதை சிந்தித்துப்பார். அவனை துதித்து போற்றவே உன்னைச் சிருஷ்டித்துள்ளான். நீ வீண் விளையாட்டில் பொழுது போக்காதே!
* ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூட இறைவனை ஒரு கண நேரம் மறந்து சுவர்க்கத்திலேயே இருந்து விட நினைத்தார்கள். அதனால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
* மீண்டும் இறைவனை மறந்து ஹவ்வாவோடு இருந்து விட நாடினார்கள். அவர்கள் இருவரும் தென் துருவத்துக்கும், வட துருவத்துக்கும் பிரிக்கப்பட்டனர். அது மட்டுமா?
* ஹழ்ரத் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு கணம் இறைவனை மறந்து தம் செல்வ மகனுக்கு இதயத்துனுள் இடம் கொடுத்தார்கள். என்ன ஆனதென்றால் கன்ஆனில் தந்தையும், எகிப்தில் மகனுமாக ஒதுக்கப்பட்டனர்.
* ஏன், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களின் மஹ்பூபான அல்லாஹ் இருக்க வேண்டிய இடத்தில் லேசாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறிது நேரம் ஏற்றி வைத்தார்கள். அன்னை மீது வஞ்சகர்கள் அவதூறு கூறவும் அதனால் சில நாட்கள் வரை அன்னவர்கள் தர்ம பத்தினியின் முகத்தை கூட பார்க்காமல் மன சஞ்சலமடையவும் நேரிட்டதல்லவா!
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பத்ஹூர் ரப்பானி

சோதனையும் வறுமையும்
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான். (அல் குர்ஆன்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்தில் ஒருவர் வந்து “யா ரசூலல்லாஹ்! நான் உங்களை மிகவும் நேசிக்கின்றேன்”என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்:
“அப்படியாயின் பெரும் சோதனையையும், வறுமையையும் தாங்கிக்கொள்ள தயாராக இரு. என்னை நேசிப்பதாக கூறும் நீர், என் குணலட்சணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாயின் எனது அன்பிற்குரியவராவீர்”.என்று கூறினார்கள்.
இவ்வாறேதான் அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய நேசம் இருந்தது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய நட்பைப் பெற்றதும் அவர்கள் அந்த அருமை நாயகத்திற்காக தனது பொருட்களையெல்லாம் வாரி வழங்கினார்கள். அவ்வாறு வழங்கி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போன்ற குணம் பெற்று அன்னவர்களைப்போன்று வறுமையில் பங்கெடுத்தார்கள். பெரும் சீமானாக வாழ்ந்த அவர்கள் கம்பளி ஆடை அணிந்துக்கொள்ளும் அளவுக்கு எளிமையை மகிழ்வுடன் ஏற்று ரஸுல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய நேசத்தையே உள்ளும், புறமும், அந்தரங்கத்திலும், பகிரங்கத்திலும் எடுத்து நடந்தார்கள்.
“பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடிச் செல்லும் தண்ணீரை விட அதிவேகமாக என்னை நேசிக்கும் மனிதனுக்கு வறுமை விரைந்தோடிச் செல்லக்கூடியது”.
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருப்பது இக்காரணத்திற்காகவே.
இவற்றைக்கொண்டு நாம் உணர்ந்து கொள்வது யாதெனில்,
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நேசத்துக்கு நிபந்தனை வறுமை என்பதுவும், அல்லாஹ்வின் நேசத்துக்கு நிபந்தனை சோதனை என்பதுவுமே.
எல்லா விதமான சோதனைகளும் நேசர்களுக்கே வந்து சேரும், காரணம் அவர்கள் அல்லாஹ்விடம் கொண்டுள்ள நேசத்தில் பொய், உள்ளொன்று புறமொன்றான சுபாவம், முகஸ்துதி, முதலியன இல்லாமல் உள்ளம் சுத்தமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்று என்று பரீட்சிக்கப்படுவார்கள் என்று பெரியார்களில் ஒருவர் கூறியுள்ளார்கள்
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பத்ஹூர் ரப்பானி
திருமணமும் பொறுமையும்
நீ
வறுமையில் கஷ்டப்படுகையில், உனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை
உண்டாகிறது. ஆனால் உனக்கு அதற்கான வசதி இல்லை. எனவே, அந்த ஆசையை உன்னுள்
உண்டாக்கிய சக்திக்கு உரியவனான அல்லாஹ்விடமிருந்து உதவியை எதிர்பார்த்தவனாக
பொறுமையுடன் காத்திரு. அப்போது அதற்கான வாய்ப்பையும் வருவாயையும்
நட்கொடையாக தந்து, போதுமான அளவுக்கு உனக்கு உணவு முதலியன கிடைக்க உதவி
செய்து, இம்மையிலும், மறுமையிலும் அந்தப் பாரத்தை நீ எளிதாக சுமக்கும் படி
செய்வதன் மூலம் அவனே உனக்கு உதவுவான். அதுவரை நீ கொண்டிருந்த
பொறுமைக்காகவும், அவன் நல்லருளில் திருப்தி காட்டியதற்காகவும், அல்லாஹ்,
அவனை "பொறுமையாளன்" "நன்றி விசுவாசம் உடையவன்" என்று அழைப்பான். அதனால்
அவன் உன் பரிசுத்தத்தையும், சக்தியையும் அதிகரிப்பான்.
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல் - புதூஹூல் கைப்
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல் - புதூஹூல் கைப்
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு கூறியது
* விதிப்பயன் மீது நம்பிக்கை வைப்பது பற்றி சிலர் விதண்டாவாதமான கேள்விகளை கேட்கின்றனர். இறைவனின் நாட்டத்தைப் பற்றி விதண்டாவாதம் செய்வது ஆகாத காரியமாகும். அவன் நாட்டத்தை பற்றி கேள்வி கேட்க கூடியவர்கள் எவருமில்லை என்பதையும், நாமே கேள்வி கேட்கப்பட இருக்கிறோம் என்பதையும் நாம் நன்கு உணரவேண்டும்.
* என் விதிப்பின் மீது திருப்திபடாதவனும், என் சோதனைக்குப் பொறுமை காட்டாதவனும் என்னை விட்டு வேறு இறைவனை தேடிக்கொள்ளட்டும். என்ற ரப்பின் எச்சரிக்கையை சிந்தனையில் வை!
* இறை விருப்பத்துக்கும், உத்தரவுகளுக்கும் இணங்கியவர்களாகி விடுமாறு மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கிறேன். தக்தீருக்கு (விதிக்கு) முரண்பட முயன்றால் தக்தீரின் சக்தி உங்களின் கழுத்தை உடைத்து விடும். என்பதை உணருங்கள். ஆண்டவனின் நாட்டத்துக்கு இணங்கியவர்களாகி விடும் வழியைதேடுங்கள்.
* சமூகத்தவர்களே, அதிகமாகவும் தேடாதீர்கள். குறைவாகவும் தேடாதீர்கள். முன் செல்லவும் நினைக்காதீர்கள், பின்னேரவும் நினைக்காதீர்கள். ஏனெனில் உங்களின் ஒவ்வொருவரின் தக்தீரும் (விதி) வெவ்வேறாக சூழ்ந்து நிற்கிறது. தலையெழுத்து நிர்ணயமாகாதவர்கள் உங்களில் எவரும் இல்லை. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் படைப்பு, உணவு, ஆயுள் ஆகியவற்றை முடித்து ஒய்வெடுத்து கொண்டான். எது, எது நிகழ வேண்டுமோ அது அதை எழுதிய எழுதுகோல் காய்ந்து போய் விட்டது. சுருக்கமாக சொன்னால், ஒவ்வொன்றின் தலை எழுத்தையும் எழுதி முடித்துக்கொண்டான்.
* அல்லாஹ்வின் நாட்டத்துக்கு இணங்கியவர்களாகி விடும் வழி தேடுங்கள். நடக்கப் போவது உங்களின் நாட்டம் அல்ல. அவனுடைய நாட்டமேயாகும். அவனது நாட்டம் நடைபெறுவதற்கு எதிராக உங்களின் நாட்டம் என்ன செய்ய முடியும்? அவனது நாட்டம் நடைபெறுவதில் குறுக்கிடும் ஆத்மாக்கள் அழிவுக்குள் ஆகும் என்பதில் சந்தேகம் உண்டா? 'அவனது நாட்டம் நடைபெறட்டும்’ என்றவர்களாக தக்தீருக்கு (விதிக்கு) அடிப்பணிந்தவர்களாகி விடுங்கள்.
* 'தக்தீர்’ (விதி) இல் உள்ளது நடக்கும் போது படைத்தவனை குறைகாண்பது மதத்தின் மரணமாகும். தௌஹீதின் சாவாகும். தவக்கலினதும், உண்மையினதும் அழிவாகும். முஃமினான அடியானின் மனமோ, நிகழ்ச்சிகள் ஏன், எப்படி நடக்கின்றன என்ற சந்தேகம் கொள்ளாமல் ‘சிரம் சாய்க்கிறேன்’ என்று கொள்ளும்.
No comments:
Post a Comment