ஆண்டுதோறும் பலத்த மழை பொழிந்து, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதைப்போல, ஆண்டுதோறும்
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்கப்படுவதும், உச்ச நீதிமன்றமும் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதல்
இடங்களை ஒதுக்கும்படி உத்தரவிடுவதும் வழக்கமாகிவிட்டது.
69% இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இழந்ததாக இதுவரை யாரும் நீதிமன்றத்தின் படிகளை ஏறியதில்லை. ஆனால், பொறியியல், மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை நாடுவதும், நிவாரணம் தரப்படுவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
இந்தப் பிரச்னை கல்வி நிறுவனத்தைச் சார்ந்ததாக இருக்கிறது என்பதை உணர்ந்து, மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும், பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகமும் தொடக்கத்திலேயே கூடுதல் இடங்களை (நீதிமன்றம் கூறியுள்ள 69+50=119 இடங்களை) ஒதுக்கி, மாணவர் சேர்க்கை நடத்தினால் இந்தச் சிக்கல் இருக்காது.
இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருத்தல் கூடாது என்பதுதான் மண்டல் கமிஷன் பரிந்துரை தொடர்பான வழக்கில் 1992-ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. ஆனாலும் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முடிவு சரியா, தவறா என்பதல்ல பிரச்னை. இந்த இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் விதம்தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் தற்போதைய இடஒதுக்கீட்டு நடைமுறைப்படி, 100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 30 இடங்கள் (பிற்படுத்தப்பட்டோர் 23% இஸ்லாமியர் 3.5%, கிறிஸ்துவர் 3.5%) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோர் 18 இடங்கள், பழங்குடியினர் 1 இடம் என 69 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதியுள்ள 31 இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவு.
இந்தப் பொதுப்பிரிவு என்பது, இடஒதுக்கீடு பெற முடியாத மற்ற சமூகத்தினருக்கானது என்பதாகக் கருதப்படுவதில்லை. இந்த இடங்களுக்கு தகுதி அடிப்படையில் (மெரிட்) மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, இடஒதுக்கீடு கோரும் ஒவ்வொரு மாணவரும் தனக்கான பிரிவில் விண்ணப்பிக்கிறார். மாணவர் சேர்க்கையில் அவரது முறை வரும் நேரத்தில், பொதுப் பிரிவில் இடம் காலியாக இருந்தால், அந்த இடத்தை அவர் தேர்வு செய்யலாம். உதாரணமாக, அவர் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும், பொதுப்பிரிவின் கீழ் அவர் சேர்ந்து கொள்ளும்போது, பொதுப்பிரிவில் ஒரு எண்ணிக்கை கழிகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இத்தகைய "கியு ஜம்பிங்' காரணமாக, அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட, இடஒதுக்கீடு பெறமுடியாத சாதியினரால் இந்த 31 இடங்களில் பாதியைக்கூட பெற முடிவதில்லை என்பதால்தான் அவர்கள் நீதிமன்றத்தின் படிகளில் ஏறுகிறார்கள்.
எந்தப் படிப்பாக இருந்தாலும், பொதுப்பிரிவில் சேர்ந்த மாணவர்களில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை அரசு வெளிப்படையாகப் பட்டியல் வெளியிடுமானால், இந்த உண்மையை எவரும் எளிதில் உணர முடியும். பாதிக்கப்படும் பொதுப்பிரிவினர் நீதிமன்றத்தை நாடுகிறார்களே தவிர, மற்றபடி இந்த மாணவர்கள் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்லர்.
தற்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை கூடிவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றம் காலாகாலமாக வலியுறுத்தி வரும் "கிரீமிலேயர்' பிரிவினரை இந்த இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை எந்த அரசும், வாக்குவங்கி அரசியலுக்காக, ஏற்கத் துணிவில்லாமல் இருக்கின்றன.
இந்தச் சிக்கலுக்கு இரண்டு தீர்வுகள்தான் உள்ளன.
முதலாவது, கிரீமிலேயரைத் தீர்மானித்து, அவர்களை இடஒதுக்கீட்டில் பயன்பெற முடியாதபடி செய்வது! ஏற்கெனவே இடஒதுக்கீடு மூலம் உயர் கல்வி, நல்ல பதவிகளைப் பெற்று, வசதியுடன் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
ஆனால், இதற்குக் கடுமையான எதிர்ப்பு, குறிப்பாக, இடஒதுக்கீட்டால் பலனடைந்த உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், டாக்டர்கள் போன்றோரிடமிருந்து எழுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்பதுதான் இதற்கு காரணம்.
இரண்டாவது தீர்வு- 31% பொதுப்பிரிவு ஒதுக்கீட்டை "இடஒதுக்கீடு பெற முடியாத' மாணவர்களுக்கானது என மாற்றிவிட முடியாது என்றாலும்கூட, முஸ்லிம்களுக்கு 3.5%, கிறிஸ்துவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு அளிப்பதைப்போன்று, இடஒதுக்கீடு பெறத் தகுதியில்லா சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்து, மீதி இடங்களை தகுதி (மெரிட்) அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கலாம். ஆனால், இதற்கும் நிச்சயமாக எதிர்ப்பு கிளம்பும்.
சமூக நீதி என்பது நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டே போகிறது. சமூக நீதி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்குப் பதிலாக, சமூகத்தில் வெவ்வேறு பிரிவினர்களுக்கிடையே மனக்கசப்பை அதிகரிப்பதற்கும், ஆண்டாண்டு காலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களில், பயனடைந்தோர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சலுகைகளை அனுபவிக்கும் நவீன வர்ணாசிரமத்தை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுமேயானால் அதற்குப் பெயர் சமூக அநீதி!

No comments:
Post a Comment