நீண்டகாலம்
வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில்,
தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான்
கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில்
ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய்
உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம்,
இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு
வகிக்கிறது.
தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி
உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய்
எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை
பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
இதுபோன்ற
பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக
வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக
கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.
No comments:
Post a Comment